Sunday, August 21, 2011

கவிதை - புதிய களம்

ண்டையிட புதிய களம்
கிடைத்திருக்கிறது அரசிக்கு

தலைவிரி கோலமாய்
தலைசாய்த்துப் பார்க்கும் பெண்கள்

கண்கள்மேய தனத்தின் அடிவாரம்தெரிய
உடுத்தும் பெண்கள்

இறுக்கமாய் அணிந்து
மிடுக்காய் போஸ் கொடுக்கும்
வேற்றுநாட்டு இராணிகள் இளவரசிகள்

இப்படியாரேனும்
ஃபேஸ்புக்கில் நண்பராக இணைய
அரசனுக்கு வேண்டுகோள் விடுக்கையில்...

அறிந்த தோழிதானெனினும்
இரவில் அரட்டையில் வருகையில்...

“உர்”ரென்று ஆகிவிடுகிறாள் அரசி.
சமாதானப் படுத்துவதற்குள்
ஃபேஸ்புக்கும் வேண்டாம்
ஒரு எழவும் வேண்டாம்
என்றாகிவிடுகிறது அரசனுக்கு.

2 comments:

  1. அரசனுக்கு, அரசியின் மீதோ, தோழிகள் மீதோ, அறியாத பிற பெண்கள் மீதோ எந்த மதிப்புமில்லை என்பதும் உடல் மேயும் கண்களே அரசனுடையவை என்பதும் புரிகிறது!!!!!!!!!!

    ReplyDelete