Tuesday, December 6, 2011

அம்பேத்கர் நினைவுநாள் - டிசம்பர் 06


அம்பேத்கர் நினைவுநாளான இன்று (டிசம்பர் 06) முகநூலில் வினி சர்ப்பனா என்கிற தோழர் ஒரு சிறந்த பதிவை வெளியிட்டிருந்தார். அதை இங்குப் படிக்கத் தருகிறேன்.
சாதீயங்களால் மட்டுமே அபிஷேகம் செய்யப்பட்டது என் அன்னை தேசம்.ஆனால் சாதியின் பெயரால் ஒரு மாபெரும் தலைவனை வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு செய்யலாம் என்பதற்கு, உலகில் இந்தியாவை தவிர.. மிக சிறந்த உதாரணம் இல்லை.பள்ளி கல்லூரிகளில் கூட அம்பேத்கர் குறித்த தெளிவான வரலாறு, பாடங்களாக இல்லை..என்னடா கொடுமை உலகமே போற்றும் பேரறிஞன் அம்பேத்கரை ப‌ற்றி பேசினால்,எழுதினால்,படித்தால் தலித் முத்திரை குத்தி முட்டாளாகிறார்கள்.அம்பேத்கர் தலித்துகளுக்கு மட்டுமில்லாமல் உயர் சாதியினருக்காகவும் போராடியவர் என்பது, அவரது நூல்களை படித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.ஏப்ரல் 14 அம்பேத்கரின் பிறந்த தினம் என்பதால் தான் அரசு விடுமுறை விடுகிறது.ஆனால் இது மக்களுக்கு தெரிய கூடாது என்பதற்காக‌ ,த‌மிழ் நாட்டில் தமிழ் புத்தாண்டு ஆந்திரா,கர்நாடகாவில் தெலுங்கு புத்தாண்டு,கேரளா,பஞ்சாப்,ராஜஸ்தானில் ஆண்டு தோறும் உள்ளூர் விடுமுறை.இது போதாது என்று இந்துத்துவா கூட்டம் திட்டமிட்டு பாபர் மசூதியை இடிக்க தேர்ந்தெடுத்த நாள் டிசம்பர் 6.அன்று அம்பேத்கரின் நினைவு தினம்.அண்ணலின் நினைவு தினம் அனுசரிக்க கூடாது என்பதற்காகவே, அத்தினம் கறுப்பு தினம் ஆக்கப்பட்டது ஒரு கறுப்பு வரலாறு.பறைய பட்டி,பள்ள பட்டி.சக்கிலி பட்டி என ஊர் பேரில் சாதியை சுமந்து திரியும் தலித்துக்கள் கூட, 'அம்பேத்கர் சிலை எங்க ஊருக்கு வேணாம் சாமி" எழுதி கொடுக்கிறார்கள்.காரணம் ''அம்பேத்கர் சிலை இருந்தால் சாதி தெரிஞ்சுடும்" என எவ்வளவு புத்திசாலியாக பதிலளிக்கிறார்கள்.பகுத்தறிவு சூரியன் பெரியார் "தலைவர்" என்றழைத்த ஒரே தலைவர் டாக்டர் அம்பேத்தகர்.ஆனால் பெரியாரை போற்றும் பகுத்தறிவு பாசாங்கிகள் அம்பேத்கரை ஒதுக்கி விட்டு சாதி மறுப்பு பேசுவது தான் நகைச்சுவையின் உச்சம்.'நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுக்க தமிழே பேசப்பட்டது.அதனால் இந்தியாவின் தேசிய மொழி அருகதை இந்தியை விட தமிழுக்கே இருக்கிறது.எனவே தமிழை தேசிய மொழியாக்க வேண்டும்"என எந்த பச்சை தமிழனும் பேசியதில்லை.மராட்டியரான அம்பேத்கர் பேசி இருக்கிறார்.இதற்காக எந்த பச்சை,சிவப்பு தமிழனும் கோயில் கட்ட வேண்டாம்.தலித்தாக பார்ப்பதை கூட நிறுத்தவில்லையே. எத்துணை பெரிய தலைவரை காலங்கடந்து வாசித்திருக்கிறேன் என சமீபமாக வாழ்க்கையை நொந்து கொண்டிருக்கிறேன்.என்னை போன்ற எத்தனை,எத்தனை இளைய சமூகத்தினரை இந்த முற்போக்கு முகமூடிக் கூட்டம் பிற்போக்கிற்கு தள்ளிக் கொண்டிருக்கிறது.இப்படி பட்ட கேவலமான சமூகத்தில் வாழ்வதற்கே வெட்கமாக இருக்கிறது.போலி முற்போக்கு சிந்தனைவாதிகளை விட சாதீயம் பேசும் சனியன்களே தேவலாம்!!!
Ra Vinoth
 ·  ·  · 2 மணி நேரம் முன்பு · 
  • நீங்கள்,Puthiya Parithi,Vijayakumar Kumar,Santhi M Mary மற்றும்மேலும் 54 பேர் விரும்புகிறார்கள்.
    • Puthiya Parithi செயல் அதுவே உங்கள் கோபத்தைக் காட்ட சிறந்த வழி..
      சுமார் ஒரு மணி நேரம் முன்பு · 
    • Muthuvel Murugan மிக சரியே .... ஒரு மேல் சாதி தலைவனின் பிறந்த நாள் & நினைவுநாள் அனுசரிக்க எல்லா கட்சி தலைவனும் மறப்பதில்லை....... ஆனால் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள் ............................................. என்னஇது ஒரு சுயநல நாட்டு கட்சி தலைவர்கள்.........
      22 நிமிடங்களுக்கு முன்பு · 
    • Yazhini Munusamy அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளில் மிகச்சரியான பதிவு!விடுதலைச்சிறுத்தைகள்...பகுசன் சாமாஜ் கட்சி போன்ற சில தலித் கட்சிகள் மட்டுமே இன்று சுவர் போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள்!கம்யூனிஸ்ட்டுகள்...பெரியரிஸ்ட்டுகள்...தமிழ்தேசியவாதிகள் யாரும் அம்பேக்கரின் நினைவுநாளை நினைப்பதுமில்லை ...புதிய தலைமுறைக்கு அவரை கொண்டுசெல்லவுமில்லை1
      2 நிமிடங்களுக்கு முன்பு · 

1 comment:

  1. அவர் யாருக்கா பாடுபட்டாரோ... அவர்களில் 100க்கு 99 சதவீதத்தினரின் பர்ஸ்களிலும், வீடுகளிலும் தெய்வங்களின் படங்கள் தான் இருக்கின்றது. என்ன செய்ய முத்திரை குத்தத்தானே செய்வார்கள்... அந்த முத்திரை கேவலமானதும் அருவருப்பானதுமாக தானே நமக்கும் தோன்றும்.

    ReplyDelete