இப்போதுதான் வந்ததுபோலிருக்கிறது
மதுவாலும் மகிழ்ச்சியாலும் இரவை நிரப்பி
அந்நிய மனிதர்களுடனும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்
கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்ட அந்த நாள்.
நண்பர் கொடுத்த நாட்குறிப்பேட்டில்
ஜனவரிகூட முழுதாய்த் தாண்டவில்லை
அலுவலகத்தில் தந்த அழகான நாட்குறிப்பேடோ
கவிதை நோட்டாய் அலமாரியில்
ஒருவருட திட்டங்கள்
டைரி எழுதுவதைப் போலவே
ஒரு மாதத்தோடு முடிவடைந்துவிடுகின்றன.
“இந்த ஆண்டாவது பி.எச்டி.முடித்துவிட வேண்டும்”
என நினைத்த ஒன்பதாவது ஆண்டிது.
வயதில் ஒன்று கூடுவதைத் தவிர
ஒன்றும் பெரிதாய் நடந்துவிடுவதில்லை
செக்குமாட்டு வாழ்வில்.
என்றாலும்
எதிர்பார்ப்புடன் வரவேற்கத்தான் செய்கிறோம் அந்த நாளை.
மதுவாலும் மகிழ்ச்சியாலும் இரவை நிரப்பி
அந்நிய மனிதர்களுடனும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்
கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்ட அந்த நாள்.
நண்பர் கொடுத்த நாட்குறிப்பேட்டில்
ஜனவரிகூட முழுதாய்த் தாண்டவில்லை
அலுவலகத்தில் தந்த அழகான நாட்குறிப்பேடோ
கவிதை நோட்டாய் அலமாரியில்
ஒருவருட திட்டங்கள்
டைரி எழுதுவதைப் போலவே
ஒரு மாதத்தோடு முடிவடைந்துவிடுகின்றன.
“இந்த ஆண்டாவது பி.எச்டி.முடித்துவிட வேண்டும்”
என நினைத்த ஒன்பதாவது ஆண்டிது.
வயதில் ஒன்று கூடுவதைத் தவிர
ஒன்றும் பெரிதாய் நடந்துவிடுவதில்லை
செக்குமாட்டு வாழ்வில்.
என்றாலும்
எதிர்பார்ப்புடன் வரவேற்கத்தான் செய்கிறோம் அந்த நாளை.
புத்தாண்டு குறித்த உங்கள் கவிதை பலரின் அனுபவங்களோடு ஒன்றிப் போவது மிக இயல்பான ஒன்று. மேலும் இது போல பல கவிதைகளையும் படித்திருக்கிறோம். இக்கவிதையின் சிறப்பே இதில் உள்ள தனித்துவமான தனி மனித அனுபவங்களே. கவிதை நோட்டாய் மாறும் நாட்குறிப்பேடும், ஒன்பது வருடங்களாகியும் பிஎச்டி முடிக்கப்படாமலே இருப்பது போன்றவை தான்.
ReplyDelete"மதுவாலும் மகிழ்ச்சியாலும் இரவை நிரப்பி
அந்நிய மனிதர்களுடனும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்
கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்ட அந்த நாள்."
இந்த வரிகள், உங்கள் சொந்த அனுபவங்களோடு ஒட்டாதவை போல் தெரிகிறது. ஒரு வேளை நான் பார்த்திராத உங்களின் வேறொரு முகமாய் இருக்கலாம். இத்தகைய அனுபவக் கவிதைகள், முழுமையும் நம் சொந்த அனுபவங்களிலிருந்து வந்தால், நம்முடையதல்லாத அனுபவங்களை தவிர்த்தால் இன்னும் ஆழமாகவும், இன்னும் தர்க்கபூர்வமாகவும், இன்னும் வாழ்க்கையோடு நெருங்கி வரக்கூடியதாகவும் அமையும் என்பது என் எதிர்பார்ப்பு
மேலும் இதற்கு "வயதில் ஒன்று கூடும் நாள்" என தலைப்பிட்டிருப்பதும், உள்ளே வரும் அந்த வரியும் இது புத்தாண்டு குறித்த கவிதையா அல்லது பிறந்தநாள் குறித்த கவிதையா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
ReplyDelete