Wednesday, November 16, 2011

கவிதை - அன்புமுறி - யாழினி முனுசாமி

னைத் தூற்று
பழித்துப் பேசு
நான் பிறந்த சாதியை
இழித்துக் கூறு
கொஞ்சம் போல் அவமானப் படுத்து
எனது மனப் பறவையை
உனது பாழ்மண்டபத்தே
அண்டவிடாது துறத்து
கடுஞ்சொற்களால் காயப்படுத்து
என் காடு மணத்துக் கிடக்கும்
உன் மணத்தை
செத்துக் கிடக்கும் நஞ்சரவத்தின் நாற்றமாக்கு
எனை எனதாக்கு
நான் நானாக வாழவேண்டும்.

No comments:

Post a Comment