1. சூடுபட்ட பூனை பயந்து பயந்து நெருங்குகிறது பால் குண்டானை.
2.
இன்னும் புரியவில்லையெனக்கு நீ சாத்தானா தேவதையா?
3.
யாசிக்கப்படாத யாசகங்கள் அகால மரணமடைந்த இளம்பெண்ணின் ஆவியைப் போல் பெரும் ஏக்கத்தோடு அலைந்துகொண்டிருக்கின்றன மன அடவியில். -----------------------------------------------------------------