Friday, December 2, 2011

சிற்றிதழ் அறிமுகம் - கல்வெட்டு பேசுகிறது - யாழினி முனுசாமி

கல்வெட்டு பேசுகிறது ” எனும் நவீன கலை இலக்கியச் சிற்றிதழ் சென்னையிலிருந்து கடந்த 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. கவிஞர் சொர்ணபாரதி அதன் ஆசிரியர். கவிதை ...சிறுகதை...விமர்சனம்...கட்டுரை ...நாடகம் எனப் படைப்புகள் வெளியாகி வருகின்றன.  சொர்ணபாரதியின் அங்கதச் சுவைமிகுந்த தலையங்கம் பரவலான வரவேற்பைப் பெற்றவை.தனிமனிதராக இவ்விதழை தொடர்ந்து நடத்திவருவது பாராட்டுக்குரிய நிகழ்வாகும்.

நவம்பர் 2011 இதழில் கவிஞர் கோசின்ராவின் “ விளையாட்டு ”  மற்றும் சொர்ணபாரதியின் “வரமும் சாபமும் ”ஆகிய நல்ல இருகவிதைகள் வெளியாகியுள்ளன.

கோசின்ராவின் கவிதை...

விளையாட்டு



இலாபத்தைப் பார்க்கும் முதலாளிகளைத்
துரத்தியபடி ஓடிக் கொண்டிருக்கிறது தேசம்.
அவர்களை மகிழ்விப்பதும்
எடுபிடி வேலை செய்வதும்
முக்கியக் கடமையாகக் கருதுகிறது.


எதிர்காலத்தைப் பணமாக
மாற்றுகிறவர்களுக்கு கிராக்கியிருக்கிறது 
நிலங்களை தானமாக வழங்குவதும் 
சலுகைகளை அளிப்பதும் 
தேசத்தை உயர்த்துமெனச் சொல்லிக் சொண்டிருக்கிறது


தேசம் என்பது மக்களென்று
நம்பியவர்களை வேட்டையாடி
குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கிறது


சகோதரத்துவம் பேசுபவர்களை 
மனிதவெடிகுண்டுகளாய்ப் பார்க்கிறது
பட்டினியால் தற்கொலை செய்கிறவர்களை
தேசத்தை அவமானப்படுத்துவதாக
எழுதிக் கொள்கிறது.


மக்கள் சர்க்கஸ் பார்ப்பதைப் போல
நாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வட்டக் கிணற்றுக்குள் மரணவிளையாட்டு
நடந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
பெட்டியாகத் தம் உடல்களை
 மாற்றிக் கொண்டார்கள் மக்கள்.
-------------------------------------------------------
-------------
-----------யளனயளயககனக
.

1 comment:

  1. "விளையாட்டு" கவி​தைக்கு அடுத்து ​சொர்ணபாரதியின் "வரமும் சாபமும்" கவி​தையும் இப்பக்கத்தில் இருக்கும் என்று நி​னைத்​தேன்.

    ReplyDelete