Thursday, March 24, 2011

மாறுவேடப் போட்டியில்   கலந்துகொள்ளும் 
                   அரசியல்வாதிகள்  

கலாச் சாலைச் சிறுவர்களினும் வெகு ஆர்வமாய்க் 
கலந்துகொள்கின்றனர் மாறு வேடப்போட்டியில் அரசியல்வாதிகள் .
நம் மூதாதையரை ஆண்ட அரசர்கள்  இரவில் 
மாறுவேடத்தில் நகர்வலம் வந்ததாகக் கதைகள் உலவுகின்றன.   
நவீன மன்னர்களோ எப்போதும் மாறுவேடத்தில் .
எல்லோர்க்கும் பிடித்த எளிதான மாறுவேடம் 
ரம்ஜான் நாளில் முஸ்லிமாக மாறிவிடுவது.
ஓரே  ஒரு குல்லாய் போதுமானது 
ஒட்டுமொத்த தேசத்திற்கே போட்டுவிட. 
அன்று முதல் இன்று வரை 
எல்லோர்க்கும் பிடித்த வேடம்
விவசாயி .
இவ் வேடத்தின் முதன்மைப் பொருள் கலப்பை.
உபரிப் பொருள்கள்,
முண்டா பனியனோ கை பனியனோ
அல்லது சட்டையோ . அவரவர் வசதிக்கேற்ப .
புரட்சியாளனாய் வேஷம் போடுபவர்கள்
தொண்டர்களிடம் ஈர்ப்பையும்
தோழர்களிடம் வெறுப்பையும்     உண்டாக்கி விடுகிறார்கள்.
உடல் முழுதும் கரு நீல வண்ணம் பூசி
கிருஷ்ணனாய் இராம லட்சுமணனாய் அனுமனாய்
வேடமிட்டு அலைகின்றனர்
வறுமை துரத்திய "ஹை-டெக்" மாநில விவசாயிகள் .
ஏதேதோ  வேடமிட்டு நம்பவைத்து
மக்களைப் பிசைக்காரர்களாக்கி விடுகிறார்கள்
அரசியல்வாதிகள்.

               பு ற்று நோய் தரும் மகிழ்ச்சி

     ராஜபக்சேவுக்குப் புற்று நோயாம் 
     இப்போதாவது   உணர்வானா
     மனிதவுயிரின்  அருமையை