Tuesday, August 7, 2012

பஸோட்டி... ட்ரெயினோட்டி... லாரியோட்டி... ஸ்கூட்டரோட்டி...



கல்கி 5-8-12 இதழை மாக்கவி பாரதி நகர் நூலகத்தில் தற்செயலாகப் புரட்டினேன்...தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஔவை நடராசனின் தொடர் ஒன்று வெளியாகி இருந்தது...அதில் அவர் எம்.ஜி.ஆருக்கும் தனக்குமான தொடர்புகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்..

ஒரு கோப்பில் இவர் “ கார் ஓட்டி” என்று இருந்ததை
“காரோட்டி” என்று மாற்றியதாகவும் அதற்கு எம்.ஜி.ஆர். கார் ஓட்டி என்றிருந்தால் என்ன என்று கேட்டிருக்கி
றார் . அதற்கு அய்யா தமிழ்வேந்தர் என்ன சொன்னாராம் தெரியுமா...? நான் உங்களது “படகோட்டி” படம் பார்த்தவன் என்றாராம். இதையே சில ஆண்டுகளுக்கு முன்பு குமுதமோ...குமுதம் ஜங்கஷன் இதழிலோ இன்னும் விளக்கமாகச் சொல்லி இருந்தார்.

அதாவது ...car என்பது ஆங்கிலச் சொல் ...ஓட்டி என்பது தமிழ்ச்சொல் ..இரண்டும் எப்படி ஒன்றுசேரும் (புணரும்) என்று எம்.ஜி.ஆர். கேட்டதாகவும் ...அதற்கு நம் தமிழ்வேந்தர் அவர்கள்...நீங்கள்தானய்யா எனக்குக் குரு...நீங்கள் “ படகோட்டி”என்று பெயர் வைத்தீர்களே...அதை வைத்துத்தான் நான் “காரோட்டி” வைத்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதாவது...எம்.ஜி.ஆருக்கு இருந்த மொழி அறிவுகூட தமிழ்வேந்தருக்கு இல்லை என்று எடுத்துக்கொள்வதா...? “ஔவை”க்கும் தெரியும்தான் ... காரோட்டி என்பது சரியல்ல என்பது ...என்ன செய்வது ..? புகழ்ச்சிக்கு மயங்காதார் யாருமில்லை என்பதைப் புரிந்துகொண்ட மனிதர் அவர். எம்.ஜி.ஆருக்கு சரியாக ஜால்ரா அடித்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

இல்லையென்றால் அப்படிச் சொல்லியிருப்பாரா? படகோட்டி என்பதைப் போல் இயல்பாக காரோட்டி உச்சரிப்பு அமைந்திருப்பதற்குக் காரணம் ... “கார்” என்பது தமிழ்ச்சொல்லாகவும் இருப்பதுதான்.
கார்காலம்...கார்மேகம்...கார்கு
ழல்...என்பதைப்போல் காரோட்டியும் இயல்பாக ஒலிக்கிறது. அதற்காக எம்.ஜி.ஆரை அப்படி ஏமாற்றலாமா?

அப்படியே ஒரு சட்டம் போட்டு....

பஸோட்டி...
ட்ரெயினோட்டி...
லாரியோட்டி...
ஸ்கூட்டரோட்டி...

என்றெல்லாம் மாற்றிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ...

கலைச்சொல் உருவாக்கத்திற்கு அளப்பரிய பங்காக இருந்திருக்கும்!

இவரைப் போன்றவர்களால்தான் உயர்ந்த பதவிகளுக்கு வரமுடிகிறது...என்ன செய்வது...தமிழின் ...தமிழனின் தலைவிதி(?)...அதான் தமிழும் ...தமிழ்ப்பல்கலைக் கழகமும் வாழோ...வாழ் என்று வாழ்கிறது.!

வருத்தத்துடனும்
வேதனையுடனும்
இத்தகவலை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்..அவ்வளவே!

1 comment:

  1. take it easy policy paadiya vairamuthu tamil kavinger illaya. apaditaan
    ReplyDelete