Sunday, March 20, 2011


மௌனம் புதைந்த மனசு

அவர் கண்ணில் நீர்வழிந்து கொண்டேயிருந்தது. சிறு குழந்தையைப் போல் அவன் தோள் மீது சாய்ந்து அழத்தொடங்கினாள். தன் குடும்பத்தின் பழைய நிகழ்வுகளை நினைவு கூருகையில், இப்படி அழத்தொடங்கிவிடுவாள். உறவினர்கள் புறக்கணிப்பையும் ஏளனங்களையும் சிறுவயதிலிருந்து சேகரித்து வைத்திருக்கிறாள். ரணத்தின் வடுக்கள் அவள் மனதில் கிடங்கிட்டுக் கிடக்கின்றன. எப்போதாவது அதன்மீது கீறல் விழுகையில் அவளைச் சமாதானப்படுத்தித் தேற்ற சிலமணி நேரங்களாவது அவனுக்குத் தேவையாயிருக்கிறது. 
இன்றும் அப்படித்தான் ஆனது. அவன் மாமியார் ஏதோ பணம் கட்டிவிட்டுவர வங்கிக்குப் போகச் சொன்னதை மறுத்து, ‘உன் தம்பி என்ன செய்கிறான், அவனை அனுப்ப வேண்டியதுதானே?’ என்பதைத் தவிர பெரிதாக ஒன்றும் அவன் சொல்லிவிடவில்லை. சொல்லிமுடித்த சில நிமிடங்களுக்குள் துயரம் கனத்த மனத்துடன் வெளியே நின்றவள் சன்னலோரம் நின்று கொண்டு யாருக்கும் தெரியாமல் அழத்தொடங்கினாள். தற்செயலாக வெளியே வந்தவன் அவள் அழுவதைப் பார்த்து குழப்பத்துடன் அவளை நெருங்கிக் கேட்டான். அழுகையினூடே பேசத் துவங்கினாள். தொடர்ந்து படிக்க.....

குப்பை

அன்று ஞாயிற்றுக்கிழமை தன் வேலைகளில் மும்முரமாயிருந்தாள் நளினி. வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் மோகன். வழக்கம்போல் கணவனுக்கு காபியை கலந்து கொடுத்துவிட்டு மீண்டும் தன் வேலைகளில் ஈடுபட்டாள் நளினி. ‘குப்பை வண்டி’ யின் குரல் கேட்டதும் தன் சிந்தையை கலைத்தவன் உள்ளிருக்கும் நளினியை அழைத்தான். 


‘’குப்பை கொட்ட கூட நான்தான் வரணுமா? ஏன் நீங்க கொட்டக்கூடாதா? வீட்ல இருந்தா ஒரு சின்ன வேலை கூட செய்யக்கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன ‘’ என்று கோபப்பட்டவாறே வெளியில் இருக்கும் குப்பைக் கூடையைக் கொண்டு போனாள்.        தொடர்ந்து படிக்க....