Wednesday, February 6, 2013


சாதிவெறி எதிர்ப்புக் கவிதை - ஐந்து

யாசிக்கும் பிச்சையாளியும்
ஊர்ந்துசெல்லும் தொழுநோயாளியும் கூடத்
தன்னைச் சீண்டுபவனை ஏசுகிறான்
“ போடாப் பறத் தேவடியாப் பயலே ”
“ உங்கொம்மாள பறயன்போவ ”
ஏதுமற்றவனிமும் ஆழப் பதிந்துகிடக்கிறது
சாதிவன்மம்.
நீங்கள் சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள்
வன்கொடுமைச்சட்டத்தை மாற்ற வேண்டுமென.
--------------------------------------------------------------------

சாதிவெறி எதிர்ப்புக் கவிதை  - ஆறு

வன்புணர்ச்சியாலோ
பகடிச்சித்திரவதையாலோ
உயர்சாதிப் பெண்கள் கொல்லப்பட்டாள்
கொதித்தெழும் பாரதமாதாஜி
பறச்சியோ
பள்ளச்சியோ
சக்கிலிச்சியோ
பழங்குடிப் பெண்ணோ
நடுவீதியில் நிர்வாணமாக்கப்பட்டு
யோனியில் உதைக்கப்பட்டாலோ
கூட்டுவன்புணர்ச்சியில் கொல்லப்பட்டாலோ
சலனமற்று வேடிக்கை பார்த்தபடி கிடக்கிறாள்.
அவளுக்குத் தெரிந்திருக்கிறது
பெண்தானென்றாலும்
யார்வீட்டுப் பெண்ணென்று.
--------------------------------------------------------------------