Tuesday, April 5, 2011

nool arimugam

 மதியழகன் சுப்பையா மொழிபெயர்த்த 'கருப்பாய்  சில ஆப்பிரிக்க மேகங்கள்' கவிதை நூலைப் படித்தேன். பினவுலா டோவ்லிங் தொடங்கி ஜோலா சிக்கிதி வரை 17 கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார் , ஆசிரியர் குறிப்புகளுடன்.கவிதையில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். அதிலிருந்து இரண்டு  கவிதைகள் ...


 இருந்திருக்கிறோம் - மிஜி மகோலா
 
 பலமுறை
இதற்கு முன்னும் நாங்கள்
இங்கிருந்திருக்கிறோம்
ஆனாலும் ஒவ்வொரு முறையும்
வலியானது
ஒரே  மாதிரியாகத்தான் இருக்கிறது.

மாறிய மக்கள்  -மிஜி மகோலா

முன்பெல்லாம் 
சவங்களைக் கண்டால்
வழி மாறி நடந்திருக்கிறோம் 
இல்லையேல்
இதயங்களை தாண்டி வந்திருக்கிறோம்
இன்றோ, அதன் தலைகளை 
தோண்டி எடுக்கிறோம்
 அதன் வாயுள் இருக்கும் 
தங்கத் தகடிடப்பட்ட பல்லை
கொள்ளையடிக்க  திட்டமிடப் படுகிறது.

அந்திமழை இணைய இதழில் வெளிவந்த தொடர் இது. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பக்கம் 160 . விலை 70 ரூபாய். தொடர்புக்கு- 044 -25582552 / 9444640986 .

 மதியழகன் சுப்பையா-91 -9323306677, மதியழகன்@ஜிமெயில்.com
 -------------------------------------------------------------------------------------------------------------


  

   
   


 

1 comment:

  1. நண்ப​ரே

    ​வெளிநாட்டு குறிப்பாக ஆப்பிரிக்க இலக்கியங்க​ளை அறிமுகப்படுத்தும் தங்கள் விருப்பம் பாராட்டுக்குரியது.

    ஆனால்

    இத்த​கைய குறிப்பான அரசியல் சமூக சூழல்களில் எழுதப்பட்ட ​வெளிநாட்டு கவி​தைக​ளை அந்த சூழல்க​ளை விளக்கி அதனூடாக இக்கவி​தைக​ளை வழங்குவதுதான் அதன் சிறப்​பை உணர வழியாகும்.

    முதல் கவி​தையில் அவர்கள் எங்கிருந்தார்கள், அவர்களுக்கு எத்த​கைய வலி ஏன் ஏற்பட்டது என எதுவும் புரியவில்​லை

    இரண்டாவது கவி​தையில் இறந்தவர்களின் மன்​டை​யோட்​டை ​தோண்டி தங்கத்​தை சுரண்டும் அளவிற்கு வாழ்க்​கை சபிக்கப்பட்டவர்கள் யார், எதற்காக அவர்கள் அத்த​கைய ​வே​லைகளில் ஈடுபடுகிறார்கள் என குறிப்புகள் இல்​லை.

    ReplyDelete